ADDED : மார் 03, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, வருவாய்த்துறை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார். விழுப்புரம் தாலுகா, பள்ளிநேலியனுார், எருமனந்தாங்கல், கப்பூர், செங்காடு கிராமங்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் 11 பேருக்கும், எஸ்.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கும் பிரதமர் ஜன்மன் திட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், தாசில்தார் கனிமொழி, துணை தாசில்தார் வினோத் உடனிருந்தனர்.