/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்
ADDED : ஆக 18, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் கனவு இல்ல திட்டத்தில் 5 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 167 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுாரில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமது முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மஸ்தான் 5 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 167 பயனாளிகளுக்கு தலா 3.50 லட்சம் ரூபாயில், வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கி பேசினார். துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.