/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்
ADDED : ஆக 25, 2024 06:19 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பனையபுரத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பாலச்சந்திரன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி 12 கோடியே 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் 356 பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்ட பணி ஆணையை வழங்கி பேசினார்.
உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் ராஜா, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்,பி.டி.ஓ., குலோத்துங்கன், மேலாளர் டேவிட் குணசீலன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால் , ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.