/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
/
ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
ADDED : பிப் 27, 2025 07:28 AM

விழுப்புரம் ;விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழாவை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ஜெகதீஸ்வரி, மருத்துவரணி செயலாளர் முத்தையன் முன்னிலை வகித்தனர்.
தலைமை நிலைய பேச்சாளர் சீரைத்தம்பி (எ) கிருபானந்தம் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சண்முகம் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொறியாளர் ரமேஷ், கிளை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி, சந்தோஷ், தும்பநாயகம், ஒன்றிய கவுன்சிலர் அமுதா கணேசன், ஜெ., பேரவை இணை செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.