ADDED : மார் 10, 2025 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்வர்ணாலயா நகை மாளிகை திறப்பு விழாவில், தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் பங்கேற்றார்.
விழுப்புரம் நேரு வீதியில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குரூப்ஸ் சார்பில் ஸ்வர்ணாலயா நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, புதுச்சேரி தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் நேரில் வந்து வாழ்த்தினார்.
முன்னதாக உரிமையாளர்கள் பிரகாஷ், வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.நிகழ்ச்சியில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குரூப்ஸ் மதன் குமார், அஸ்வின் குமார், பிரவீன்குமார், அருண்குமார், தருண்குமார், ஜனார்த்தனன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.