/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கெங்கையம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
கெங்கையம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 09, 2024 05:50 AM

வானுார்: கிளியனூர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
கிளியனுார் அடுத்த பழயை கொஞ்சிமங்கலம் மகாகணபதி, ஊத்துக்காட்டு மாரியம்மன், கெங்கையம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் நிறைவடைந்து, நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்றைய தினம் லட்சுமி ஹோமமும், மாலை 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு, கோ பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. காலை 10:25 மணிக்கு, மகாகணபதி, ஊத்துக்காட்டு மாரியம்மன், கெங்கையம்மன் கோவில்களுக்கு கும்பாபிேஷக விழா நடந்தது.
தொடர்ந்து, 10:50 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.