/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 07, 2024 11:58 PM

விழுப்புரம் : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா 600க்கு 591, ஷிபானா, ரிகானா சுல்தானா, ஸ்வேதா ஆகியோர் தலா 590, அமிர்தா, ஜனத்துல்பிரதோஷ், சந்தியா ஆகியோர் தலா 578, மாணவர் சரவணராஜ் 576 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
மேலும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 30 மாணவர்கள், 500க்கு 84 மாணவர்கள் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில் 19 மாணவர்கள் 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கும், பள்ளி சார்பில் சேர்மன் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், அறங்காவலர் தமிழரசு, தாளாளர் ராஜசேகரன், முதல்வர் யமுனாராணி, துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கவுரவித்தனர்.

