நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த கெங்கவரம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து 9:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து மூலவருக்கு மகா அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது.