/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீரபத்ர காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
வீரபத்ர காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மார் 09, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த பாலப்பட்டு வீரபத்ரகாளியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று 9ம் தேதி மாலை 6:00 மணியளவில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
தொடர்ந்து நாளை 10ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாச வாகனமும், 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 9:30 மணிக்கு கடம் புறப்பாடும்,10:15 மணிக்கு விமான கோபுரம் கும்பாபிஷேகமும், 10:30 மணிக்கு மூலஸ்தன வீர பத்ரகாளியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.