/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குஷால்சந்த் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
குஷால்சந்த் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் குஷால்சந்த் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 18 மாணவிகள், 18 மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஷப்பா தஸ்னிம் 600க்கு 538 மதிப்பெண், மாணவர் சபரிவாசன் 524, முனியப்பன் 521 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர். முதலிடம் பெற்ற மாணவி கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் வெற்றிக்காக உழைத்த பள்ளியின் தலைமையாசிரியை சுஜாதா மற்றும் ஆசிரியர்களை பள்ளி நிர்வாகிகள் பப்ளசா, ஜின்ராஜ், நவீன் குமார் ஆகியோர் பாராட்டினார்.

