ADDED : மார் 06, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் கூலித் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரோஷணையைச் சேர்ந்தவர் தண்டபாணி, 47; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சில தினங்களாக வேலைக்குச் செல்லவில்லை. இந்நிலையில் அவர், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து, ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.