/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகள் அமைத்த ஏரிக்கரை சாலை எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு
/
விவசாயிகள் அமைத்த ஏரிக்கரை சாலை எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு
விவசாயிகள் அமைத்த ஏரிக்கரை சாலை எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு
விவசாயிகள் அமைத்த ஏரிக்கரை சாலை எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு
ADDED : ஆக 29, 2024 11:55 PM

வானுார்: ராயப்பேட்டை ஏரிக்கரையோரம் விவசாயிகள் அமைத்துள்ள சாலையை சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
வானுார் அடுத்த ராயப்பேட்டையில் இருந்து சின்னபேட்டைக்குச் செல்லும் சாலையில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையோரம் விவசாய நிலங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் சவுக்கு, நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால், விவசாய நிலத்திற்கு வாகனங்கள் செல்ல வழியின்றி சிறிய பாதை வழியை நடந்து செல்வதற்கு பயன்படுத்தி வந்ததால் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால், அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து, ஏரிக்கரையை ஒட்டி கருங்கற்கள், மண் நிரப்பி சாலையை ஏற்படுத்தினர். நீர் வரத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்திருப்பதாக ஒரு சிலர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து, மனு அளித்தனர்.
இந்நிலையில், அந்த பகுதியை சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது, நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிக்காமல், சாலை அமைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ., வானுார் தாசில்தாரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
அதில், விவசாயிகள் அமைத்துள்ள சாலையால் பொது மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள். மேலும், அவர்கள் தங்கள் அறுவடை செய்யும் பொருட்களை ஏற்றி செல்வதற்கும் பயன்படும். ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுத்துள்ள புகார் மனுவை ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
அப்போது, அ.தி.மு.க., அணி செயலாளர்கள் கார்த்திகேயன், வீரப்பன், சுமன், ராஜா மற்றும் ராயப்பேட்டை ஊர் நாட்டாண்மைகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

