ADDED : ஜூன் 22, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி,: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதாவை கண்டித்து செஞ்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். பார் அசோசியேஷன் செயலாளர் அசாருதீன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் நடராஜன், புண்ணியகோட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.