/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
வானுாரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 11:33 PM

வானுார் : மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சிற்றம்பலம் தபால் நிலையம் எதிரில், வானுார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு சங்கத் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். சங்க செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், மூத்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு திருத்தம் செய்து அமல்படுத்தியுள்ள மூன்று புதிய சட்டத்திருத்தங்களை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி யுள் கோஷமிட்டனர்.