/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
/
மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
ADDED : பிப் 28, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் போலீசார் நேற்று முன்தினம் மேம்பாலத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் வந்தவாசியைச் சேர்ந்த பாண்டியராஜன், 36; என்பதும், பையில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜனை கைது செய்து, 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.