ADDED : மார் 14, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த பொம்பூர் ஏரிக்கரை அருகே நேற்று மதியம் 3:00 மணிக்கு மயிலம் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது வீடூர் கிராமத்தை சண்முகம், 75; ஐவேலி கிராமத்தை சேர்ந்த சுபாஷ், 42; ஆகிய இருவரும் புதுச்சேரியிலிருந்து பைக்கில் வந்தனர்.
இவர்களை மயிலம் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தில், சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த 100 சாராய பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்தனர். பைக்கை ஓட்டி வந்த சுபாஷ் தப்பி ஓடிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.