/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் அடிபட்ட வாலிபரை மீட்ட லோகோ பைலட்: பயணிகள் நெகிழ்ச்சி
/
ரயிலில் அடிபட்ட வாலிபரை மீட்ட லோகோ பைலட்: பயணிகள் நெகிழ்ச்சி
ரயிலில் அடிபட்ட வாலிபரை மீட்ட லோகோ பைலட்: பயணிகள் நெகிழ்ச்சி
ரயிலில் அடிபட்ட வாலிபரை மீட்ட லோகோ பைலட்: பயணிகள் நெகிழ்ச்சி
ADDED : மே 04, 2024 06:57 AM
விருத்தாசலம் : எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்ட வாலிபரை, லோகோ பைலட் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் - திண்டுக்கல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5:15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு விருத்தாசலம் வந்தடைந்தது.
பின்னர் செந்துறை - அரியலுார் இடையே ரயில் சென்றபோது, ரயில்பாதையை கடக்க முயன்ற 30 வயது வாலிபர் மீது ரயில் மோதியது.
அதனைக் கண்ட லோகோ பைலட், பின்னால் இருந்து கார்டிடம் தகவல் தெரிவித்துவிட்டு ரயிலை நிறுத்தி, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு ரயிலில் ஏற்றி, 2 கி.மீ., துாரம் உள்ள அரியலுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம், அரியலுார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் சிக்கியவர் அரியலுார் மாவட்டம், மகாலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி, 31, என தெரிய வந்தது.
ரயில் அடிபட்ட வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த லோகோ பைலட்டை பயணிகள் பாராட்டினர்.