/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்
/
விழுப்புரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்
ADDED : செப் 16, 2024 06:13 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், லோக் அதாலத் நடந்தது.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற முகாமிற்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்செல்வன் வரவேற்றார்.
மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ரஹ்மான், மோட்டார் வாகன விபத்து மாவட்ட சிறப்பு நீதிபதி வெங்கடேசன், மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி இளவரசன், மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகள் நீதிமன்ற நீதிபதி பாக்கிய ஜோதி, மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜ சிம்ம வர்மன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முருகன், நீதித்துறை நடுவர்கள் அகிலா, ராதிகா வாழ்த்துரை வழங்கினர்.
விழுப்புரம் பார் அசோசியேஷன் தலைவர் சகாதேவன், கிரிமினல் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் காளிதாஸ், கிரிமினல் கோர்ட் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பன்னீர்செல்வம், லாயர் அசோசியேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன். அரசு வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், நடராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர் வேலவன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி (பொ) ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.