/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
/
மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஆக 24, 2024 07:11 AM

செஞ்சி: மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அடுத்த மேல்சேவூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முத்துமாரியம்மன், விநாயகர், முருகர், நவக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனை முன்னிட்டு 22ம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை 6 மணிக்கு கும்ப பிரதிஷ்டை, தம்பதி பூஜை, மகா சங்கல்பம், முதல் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.
நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமமும், 8.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 9.15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஆரணி எம்.பி., தரணிவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, ஊராட்சி தலைவர் ராஜகோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.