/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
/
ரயிலில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
ADDED : செப் 03, 2024 06:50 AM

விழுப்புரம் : விழுப்புரத்திற்கு வந்த ரயிலில் இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று காலை 9:00 மணிக்கு பயணிகள் ரயில் 2வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது, இன்ஜினில் இருந்து 4வது பெட்டியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இறந்த நபரின் வலது கையில் பாம்பு படமும், இடது கையில் மகேஸ்வரி, மோனிகா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. யார் என்ற விபரம் தெரியவில்லை. விழுப்புரம் ரயில்வே போலீசார் உடலைக் கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.