/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாட்சி கூறக்கூடாது என மிரட்டியவர் கைது
/
சாட்சி கூறக்கூடாது என மிரட்டியவர் கைது
ADDED : மார் 02, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே கோர்ட்டில் சாட்சி கூறக்கூடாது என மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வி.பூதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 43; இவரது தந்தையை அதே கிராமத்தை சேர்ந்த மகேஷ் (எ) மகேஷ்வரன், 45; என்பவர் கொலை செய்த வழக்கு, விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில், மகேஷ் சம்பவத்தன்று, ஆனந்தனிடம் வழக்கில் நீ சாட்சி கூறக்கூடாது என மிரட்டி ஆனந்தன் வீட்டின் பின்னால் உள்ள கொட்டகையை தீயிட்டு எரித்துள்ளார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து மகேஷ் என்கிற மகேஷ்வரனை கைது செய்தனர்.