/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்
/
மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்
ADDED : ஆக 22, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கோட்டக்கரை தண்டு மாரியம்மன் கோவில் உற்சவ விழா துவங்கியது.
வானுார் அடுத்த கோட்டக்கரை கிராமத்தில் தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊரணிப் பொங்கலிடுதல் நடந்தது. விழா நேற்று அதிகாலை 3;00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு நேற்று சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ச்சியாக வரும் 27ம் தேதி வரை தினந்தோறும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 23ம் தேதி பகல் 12;00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனையும், கூழ்வார்த்தலும் நடக்கிறது. மாலை 4;00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.