ADDED : மே 21, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானுாரில் 11 மி.மீ., மழையளவு பதிவாகியது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த பொது மக்கள், குளிர்ந்த காற்றால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:
விழுப்புரத்தில் 7, வளவனுார் 4, நேமூர் 3, வானுார் 11, திண்டிவனம் 6, மரக்காணம் 7, உட்பட மாவட்டத்தில் 38 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 1.81 மி.மீ., ஆகும்.

