ADDED : செப் 14, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: சீதாராம் யெச்சூரி மறைவிற்கு மா.கம்யூ., சார்பில் அவலுார்பேட்டையில் இரங்கல் கூட்டம் நடந்தது.
அவலுார்பேட்டை கடைவீதியில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு, வட்ட செயலாளர் முருகன் தலைமையில், சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், காங்., வட்டார தலைவர் ராஜவேலாயுதம்,ஊராட்சி தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகினர்ஷத், பாலு, மா.கம்யூ., உதயகுமார், எழில்ராஜா, கிளை செயலாளர் சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.