/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
மேல்மலையனுார் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
மேல்மலையனுார் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
மேல்மலையனுார் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : செப் 13, 2024 07:27 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் நடந்த தி.மு.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்ற ஊராட்சிகளுக்கு அமைச்சர் மஸ்தான் தங்க காசு வழங்கினார்.
மேல்மலையனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அவலுார்பேட்டையில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் அர்ஷத்பேக், முருகன், ரேணு, பொருளாளர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவசக்தி, ரகுராமன், தாகிராவகாப் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்திசுப்ரமணியன் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், அமைச்சர் மஸ்தான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். பாராளுமன்ற தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்ற அவலுார்பேட்டை, பெருவளூர், எதப்பட்டு ஊராட்சிகளை பாராட்டி தங்ககாசுகளை நிர்வாகிகளிடம் அமைச்சர் வழங்கினார்.
தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் தேவகுமார் ஆதரவாளர்கள் 25 பேருடன் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க., வில் சேர்ந்தார். சென்னையில் 17 ம்தேதி நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக நிர்வாகிகள் பங்கேற்பது, கருணாநிதியில் உருவசிலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி,
கிளை செயலாளர் நடராஜன், ஊராட்சி தலைவர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் செல்விராமசரவணன், சம்பத், மருத்துவரணி முனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.