ADDED : ஆக 29, 2024 11:45 PM

நுண்ணுாட்ட உரங்கள் வழங்கல்
விக்கிரவாண்டி: மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நுண்ணுாட்ட உரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கி வழங்கினார். மானியத்தில், நுண்ணுாட்ட கலவை திட்டத்தின் கீழ் நெல், கரும்பு, வேர்க்கடலை, பயறு வகைகள், சிறுதானிய வகைகள், தென்னை நுண்ணுயிர் உரங்களை வழங்கினார். வேளாண அலுவலர் கவிப்ரியன் உதவி வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் பங்கேற்றனர்.
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
விக்கிரவாண்டி: தும்பூரில் நடந்த மத்திய ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீதா அரசி ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் வரவேற்றார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு விழா கிளைகள் தோறும் கொண்டாடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களுடன் முதல்வர் முகாம்
செஞ்சி: வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீழ்பாப்பாம்பாடி, தையூர், ஆனாங்கூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, பி.டி.ஓ.கள் உதயகுமார், இளங்கோவன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான் சிறப்புரை நிகழ்த்தி, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் தாசில்தார் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை அமல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் ரயில் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். தலைவர் சதீஷ்குமார், துணை தலைவர் பார்த்தசாரதி, பொருளாளர் செந்தமிழ்பாண்டியன் முன்னிலை வகித்தனர். தென்மண்டல உதவி செயலாளர் இருசப்பன், உதவி செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
செஞ்சி: பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் செஞ்சியில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் எழிலரசன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் பயிற்சியளித்தார். சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆளவந்தார், விவசாய அணி தமிழரசன், வர்த்தக அணி கார்த்திகேயன், இளைஞரணி சுரேஷ் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: தி.மு.க., நகர செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு, நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். டாக்டர் ராஜசிகாமணி, பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், நகர பொருளாளர் சையது நாசர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நகர அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வது. அனைத்து வார்டுகளிலும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய கட்டடங்கள் திறப்பு
விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியம், மேல்பாதியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் புதிய ரேஷன் கடை, காவணிப்பாக்கம் ஊராட்சியில் மற்றும் திருவாதியில் நாடக மேடை, நன்னாடு ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, ரவிக்குமார் எம்.பி., புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர் வனிதா, பி.டி.ஓ.,க்கள் வெங்கடசுப்ரமணியன், ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
விழுப்புரம்: கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமை தாங்கி வழங்கினார். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த், ஆல் தி சில்ரன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். 73 கர்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், அவல், சோயாபீன், உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் உள்ளிட்ட ஊட்டச்சத்து உதவி பெட்டகம் வழங்கப்பட்டது. மருத்துவர் கோமதி, கண்காணிப்பாளர் மஞ்சுளா, பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
விழுப்புரம்: விரட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்திற்கு, முதுகலை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். தலைமை ஆசிரியர் மல்லிபிரபா தலைமை தாங்கினார். கோலியனுார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி சிவா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பாலம் பணி: அமைச்சர் ஆய்வு
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் செல்லும் சாலையில் கோவில்புரையூர் - நொச்சலுார் இடையே 4.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்து, பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் பத்மநாதன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் உடனிருந்தனர்.
குடல் இறக்க சிகிச்சை முகாம்
திண்டிவனம்: திண்டிவனம் வாசவி கிளப், வனிதா, டிரெண்ட் செட்டர்ஸ், மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் நடந்த இலவச குடல் இறக்க சிகிச்சை முகாமில், புதுச்சேரி ஜெம் மருத்துவமனை டாக்டர்கள் சசிகுமார், சுகுமார் குழுவை சேர்ந்தவர்கள் 50க்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், பாலாஜி, வெங்கடேசன், மனவளக்கலை பிரபாகரன், ஹரி புருேஷாத்தமன், வட்டார தலைவர் பிரபாகரன், ஜெயலட்சுமி, ருக்மணி, அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அரசு பள்ளிக்கு குடிநீர் இயந்திரம்
செஞ்சி: காரியமங்கலம் அரசு தொடக்கப் பள்ளிக்கு செஞ்சி அரிமா சங்கத்தினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கினர். நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை விஜயா தலைமை தாங்கினார். செஞ்சி அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் முருகன், சொர்ணலதா, செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் பிரகாசம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை துவக்கி வைத்தார். பொன்னுசாமி, சிவமணி பங்கேற்றனர். ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ஆலோசனைக் கூட்டம்
செஞ்சி: செஞ்சி, கெடார், கஞ்சனுார், சத்தியமங்கலம், நல்லாண்பிள்ளை பெற்றாள், அனந்தபுரம், வளத்தி, அவலுார்பேட்டை காவல் நிலைய எல்லைகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து விழா குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், காவல் துறையின் வழிகாட்டி நெறிமுறைகளையும், அரசின் விதிமுறைகளையும் பின்பற்றி உரிய அனுமதி பெற்று விழா நடத்த அறிவுறுத்தப்பட்டது.
மக்களுடன் முதல்வர் முகாம்
விக்கிரவாண்டி: நகர் கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பாலச்சந்திரன் வரவேற்றார். முகாமில் தாசில்தார் யுவராஜ், பி.டி.ஓ., குலோத்துங்கன், துணை பி.டி.ஓ , ரூபன்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.