ADDED : செப் 18, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டையில் மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
முகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு அவலுார்பேட்டை மசூதியில்
ஹஸரத் முகமது ஆதில், தினசரி 12 நாள் வரை இஷா தொழுகைக்கு பின்னர் , பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையினை குறித்து சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
நேற்று முன்தினம் இரவு விருந்து பரிமாறப்பட்டு, தப்ரூக் வழங்கப்பட்டது.
இதில் ஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.