/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆவணிப்பூரில் புதிய நுாலகம் அமைச்சர் திறந்து வைப்பு
/
ஆவணிப்பூரில் புதிய நுாலகம் அமைச்சர் திறந்து வைப்பு
ஆவணிப்பூரில் புதிய நுாலகம் அமைச்சர் திறந்து வைப்பு
ஆவணிப்பூரில் புதிய நுாலகம் அமைச்சர் திறந்து வைப்பு
ADDED : செப் 13, 2024 07:31 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஆவணிப்பூரில் தி.மு.க., சார்பில் புதிய நுாலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி சார்பில், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஆவணிப்பூரில் நேற்று காலை கருணாநிதி நுாலகம் திறப்பு விழா நடந்தது.
ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மஸ்தான், கட்சி கொடியை ஏற்றி வைத்து, குத்துவிளக்கேற்றி நுாலகத்தை திறந்து வைத்தார்.
இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், சேதுநாதன், செந்தமிழ்செல்வன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு.
அண்ணாமலை, விஜயகுமார், உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பழனி, தயாளன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.