/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடை வெயில் தாக்கம் முடியும் வரை நீர், மோர் பந்தல்கள் பராமரிக்கப்படும் அமைச்சர் பொன்முடி தகவல்

ADDED : ஏப் 30, 2024 11:22 PM
விழுப்புரம் : 'கோடை வெயிலின் தாக்கம் முடியும் வரை நீர், மோர் பந்தல்கள் பராமரிக்கப்படும்' என அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 2 நாட்களுக்கு முன், தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மற்றும் தண்ணீர் பிரச்னை தீர்ப்பது குறித்து, ஆலோசனை நடத்தினார். அவர், அதிகாரிகள், அமைச்சர்களிடம் கலந்துபேசி, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும், கட்சியினர் நீர் மோர் பந்தல் ஏற்படுத்தி, கொளுத்தும் கோடை வெயிலை தணிக்கும் வகையில் நீர் மோர், பழங்கள் வழங்கவும், வெயில் கொடுமை தெரியாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி இன்று, விழுப்புரத்தில் மட்டும் 7 இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், விக்கிரவாண்டி, நேமூர், காணை உள்ளிட்ட இடங்களிலும் திறக்கப்படும்
நாளை திருக்கோவிலுார் தொகுதியிலும் தொடர்ந்து, நீர் மோர் பந்தல் திறக்கப்படும். இதனால், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு உதவும் விதமாக இந்த நீர், மோர் பந்தல்கள், கோடை வெயில் முடியும் வரை தொடரும். கட்சி நிர்வாகிகள், பிற இடங்களில் நீர், மோர் பந்தல்கள் திறந்து, பராமரிக்க வேண்டும். விழுப்புரத்தில் கடந்த தி.மு.க.,. ஆட்சியின்போது, கொண்டு வந்த குடிநீர் திட்டத்தால் தான், ஓரளவுக்கு பிரச்னையின்றி உள்ளது.
இவ்வாறு பொன்முடி கூறினார்.