/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி உறுதி அமைச்சர் உதயநிதி பேச்சு
/
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி உறுதி அமைச்சர் உதயநிதி பேச்சு
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி உறுதி அமைச்சர் உதயநிதி பேச்சு
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி உறுதி அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : ஜூலை 09, 2024 04:51 AM

விக்கிரவாண்டி : 'தி.மு.க., வேட்பாளரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என அமைச்சர் உதயநிதி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தும்பூர், நேமூர், விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கடந்த எம்.பி .,தேர்தலில் பாசிச கூட்டணிக்கு எதிராக முதல்வர் மேற்கொண்ட பிரசாரம் 100 சதவீத வெற்றி பெற்றது. தமிழக முதல்வர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை உறுதியாகிறது. மக்களின் கோரிக்கைகள், நம்பிக்கைகளை இந்த அரசு முழுமையாக செய்து கொடுக்கிறது.
வட மாநிலங்களில் இப்போதுதான் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க., 7 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது.
இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து அன்னியூர் சிவாவை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.
அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், மஸ்தான், கணேசன், சேகர் பாபு, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், ரகுபதி ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, காந்தி, பூம்புகார் எம்.எல்.ஏ., நிவேதா முருகன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன்.
பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, துணை சேர்மன் ஜீவிதா, பேரூராட்சி சேர்மன் அப்துல்சலாம், துணை சேர்மன் பாலாஜி.
ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், செல்வம், சாவித்திரி, முகிலன், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், புதுச்சேரி எம்.எல்.ஏ., சிவா, புதுச்சேரி மாநிலத் துணைச் செயலாளர் குமார், செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.