/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தகவல்

ADDED : ஜூலை 07, 2024 04:11 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் உதயநிதி தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவா(எ)சிவசண்முகத்தை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி இன்று (7ம் தேதி), நாளை (8ம் தேதி) தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் தலைமையில் அமைச்சர் உதயநிதி, இன்று மாலை 4.00 மணிக்கு திருவாமாத்துார், 5.00 மணிக்கு காணை, 6.00 மணிக்கு பனமலைப்பேட்டை, இரவு 7.00 மணிக்கு அன்னியூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து நாளை, காலை 8.00 மணிக்கு தும்பூர், 9.00 மணிக்கு நேமூர், மாலை 5.00 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளில் ஓட்டுகளை சேகரிக்கவுள்ளார். இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் இண்டியா கூட்டணி நிர்வாகிகள் உட்பட அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.