/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு கட்டும் திட்ட ஆணை அமைச்சர் வழங்கல்
/
வீடு கட்டும் திட்ட ஆணை அமைச்சர் வழங்கல்
ADDED : ஆக 25, 2024 06:17 AM
செஞ்சி: செஞ்சியில், வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., சீதாலட்சுமி வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் 4 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 136 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, குமார், கந்தசாமி, ஊராட்சி தலைவர்கள் ரவி, ராஜேந்திரன், தாட்சாயணி, முத்தம்மாள், அனுசுயா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பி.டி.ஓ., முல்லை நன்றி கூறினார்.