/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி விடுதிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
அரசு பள்ளி விடுதிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : செப் 13, 2024 07:39 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா நேற்று தனது சொந்த ஊரில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோர் விடுதியை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது இரு விடுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்டுகிறா, சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறாதா என ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவ, மாணவிகளிடம் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்தும்,வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் தாசில்தார் யுவராஜிடம் விடுதியில் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு கூறினார்.
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.