ADDED : ஜூன் 01, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தில், எம்.எல்.ஏ., சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, நலத்திட்ட பணிகள் முறையாக தொய்வின்றி நடைபெற வேண்டும். பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வரி விதிக்கப்படாத நிறுவனங்கள் மீது முறையாக வரி விதிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மாத ஊதியம் மற்றும் போதிய உபகரணங்கள் முறையாக வழங்கப்பட வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, இளநிலை பொறியாளர் சுப்ரமணி, இளநிலை உதவியாளர் காமராஜ், உதவி எழுத்தர் கதிரவன், தி.மு.க., நிர்வாகிகள் வரதராஜ், சங்கர், செல்வகுமார், சுபாஷ் உடனிருந்தனர்.
