/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
/
அதிக பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 14, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிக பனிப்பொழிவு பெய்ததால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.
விழுப்புரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த சூழலில் கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது. லேசான சாரல் மழையும் அவ்வப்போது பெய்தது. நேற்று காலை 6.00 மணிக்கு பனிப்பொழிவு அதிகம் காரணமாக வாகன ஓட்டிகள், வாகனம் வருவதை எச்சரிக்கை செய்வதற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றனர். விழுப்புரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இந்தப் பனிப்பொழிவு காலை 7.30 மணி வரை நீடித்தது.