/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
/
முண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 23, 2024 07:02 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் முண்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
முண்டியம்பாக்கம் முத்தாம்பிகை உடனுறை முண்டீஸ்வரர் கோவில் கிராம பொதுமக்கள் சிவ தொண்டர்களால் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ம் தேதி காலை10.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது .
நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து கடம் புறப்பாடாகியது. காலை 10.02 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜைகளை திருமாணிக்குழி நடராஜ குருக்கள் தலைமையில் விஸ்வநாத குருக்கள் முன்னின்று செய்திருந்தார்.
முண்டியம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் திரளாக கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா மாசிலாமணி தலைமையில் சிவ தொண்டர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் முன்னின்று செய்திருந்தனர்.