/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
/
தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 15, 2025 06:42 AM
கோட்டக்குப்பம்: தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் கோட்டக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் 2 நாட்களுக்கு முன் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, புற்றீசல் போல் கட்டப்பட்டிருந்த தனியார் கெஸ்ட் ஹவுஸ்களில் முறையாக வரி வசூல் செய்யப்படுவது குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தார்.
அப்போது சில கெஸ்ட் ஹவுஸ்கள் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அனுமதி பெறாமலும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனர் புகேந்திரி தலைமையில் அதிகாரிகள், தந்திராயன்குப்பம், நடுக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதோடு, அனுமதி பெற்று செயல்படுகிறதா என 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.