/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
/
மயிலம் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : மார் 01, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜூவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் வீரமுத்து வரவேற்றார். முதல்வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் மனோகரன் மாணிக்கம் பேசினார். பேராசிரியர் அருணகிரி வாழ்த்திப் பேசினார். உதவி பேராசிரியர்கள் சுதா, அமுதவள்ளி, குணசேகரன், ஹரிஷ் பாபு, அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.