/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம்பாதிக்க வழியில்லை; எப்படி செலவு செய்வது தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
/
சம்பாதிக்க வழியில்லை; எப்படி செலவு செய்வது தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
சம்பாதிக்க வழியில்லை; எப்படி செலவு செய்வது தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
சம்பாதிக்க வழியில்லை; எப்படி செலவு செய்வது தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
ADDED : மார் 25, 2024 05:23 AM
தேர்தலில் சுவர் விளம்பரம் செய்வதில் அ.தி.மு.க.,வினர் முந்தும் நிலையில் தி.மு.க.,வினர் செலவு செய்ய பணம் வராததால், சம்பாதிக்கத்தான் வழியில்லை; எப்படி செலவு செய்வது என புலம்புகின்றனர்.
லோக்சபா தொகுதி தேர்தலையொட்டி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து செயல்வீரர்கள் கூட்டம், அறிமுகக் கூட்டம் என பிசியாகி விட்டனர். இன்னொரு பக்கம் சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில், அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பு, அந்தந்த ஒன்றிய நிர்வாகிகள் தாராளமாக செலவிட்டு களப்பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளதால், விழுப்புரம், உளுந்துார்பேட்டை, திண்டிவனம், செஞ்சி என ஒன்றியம் வாரியாக சில தினங்களாக, வேட்பாளர் பெயருடன் சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.
தி.மு.க.,வில் கூட்டணி கட்சி என்பதால், 'ப' வைட்டமின் கிடைக்காததால் இன்னும் பல இடங்களில் தொடங்காமல் உள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, விழுப்புரத்தில் தொடர்ந்து 2வது முறையாக கூட்டணிக்கு தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டனர். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து செலவு செய்தும், விருப்ப மனு கொடுத்தும் ஏமாந்து, விரக்தியில் உள்ளோம்.
செலவுக்கு பயந்து, எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட களப்பணியை தொடங்கவில்லை. எங்களுக்கு சம்பாதிக்கவும் வழியில்லை, செலவு மட்டும் எப்படி செய்ய முடியும் என ஆளும் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்-நமது நிருபர்-.

