ADDED : ஆக 08, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு செவிலியர் சங்கம் சார்பில் நடந்த தொடர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் அம்பேத்கர் கணபதி தலைமை தாங்கி கோரிக்கை உரையாற்றினார். செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
மருத்துவத்துறையில் தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆட்குறைப்புக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். செவிலிய அலுவலர் என பெயர் மாற்றத்தோடு பணி வரன்முறை செய்யவும் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
