/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராக்டரில் சிக்கி முதியவர் பலி
/
டிராக்டரில் சிக்கி முதியவர் பலி
ADDED : மார் 31, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : சைக்கிளில் சென்ற முதியவர் கரும்பு டிராக்டரில் சிக்கி இறந்தார்.
செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அடுக்குமலை மகன் முத்து, 55; விவசாயி. இவர், நேற்று மாலை 5:20 மணியளவில் நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடிக்குளத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் பகுதியில் இருந்த இரட்டை டிரைலர்களில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், முத்துவை முந்தி சென்ற போது, முத்து நிலை தடுமாறி டிரைலரின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.
நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

