ADDED : மே 22, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: பண்ருட்டி அடுத்த பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம், 75; இவர் நேற்று முன்தினம் இரவு திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அமாவாசைபாளையம் பஸ் நிறுத்தம் கடலுார் - சித்துார் சாலையை நடந்து கடக்க முயன்ற போது, அவ்வழியாக சென்ற பல்சர் பைக் மோதி, படுகாயமடைந்தார்.
அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

