/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
/
கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மீட்பு
ADDED : ஆக 27, 2024 04:18 AM

விழுப்புரம் : விழுப்புரம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. பலத்த காயங்களுடன் சிக்கிய டிரைவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்ட தனியார் ஆம்னி சொகுசு பஸ் (TN.13 AE 8191) திருச்சி நோக்கி சென்றது.
இந்த பஸ் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விழுப்புரம் பைபாஸ் சாலையில், இந்திரா நகர் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத கன்டெய்னர் லாரியின், பின் பக்கத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், தனியார் ஆம்னி பஸ்சின் முன் பக்கம் முழுதும் நசுங்கி சேதம் அடைந்தது.
ஆம்னி பஸ் டிரைவர் சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் விஜயகுமார், 48; முன் பகுதியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினார்.
இதை தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பஸ்சின் முன்பகுதியில் சிக்கியிருந்த டிரைவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.