/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆன் லைன் மூலம் மின் கட்டணம்: சிறு வியாபாரிகள், ஏழைகள் பாதிப்பு
/
ஆன் லைன் மூலம் மின் கட்டணம்: சிறு வியாபாரிகள், ஏழைகள் பாதிப்பு
ஆன் லைன் மூலம் மின் கட்டணம்: சிறு வியாபாரிகள், ஏழைகள் பாதிப்பு
ஆன் லைன் மூலம் மின் கட்டணம்: சிறு வியாபாரிகள், ஏழைகள் பாதிப்பு
ADDED : ஆக 24, 2024 07:02 AM
ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிற புதிய விதிமுறையை திரும்பப் பெறுமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட விதிமுறை, சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இனி, ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் உள்ள மின் கட்டணத்தை பொதுமக்கள், ஆன்லைன் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் ஆன்லைனில் கட்டுவதற்கு நெட் சென்டருக்கு சென்று 50. 100 என்று கூடுதலாக செலவு செய்ய வேண்டும். ஆன்லைனில் நெட்வொர்க் பிரச்னை ஏற்படும்போது, செலுத்திய பணம் திரும்பி வந்து விடும். இதை கவனிக்கத் தவறினால், மீண்டும் அபராதத்துடன் மின் கட்டணமாக கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல ஒரு குடும்பத்தில், ஒரே பெயரில் இரண்டு மின் சர்வீஸ்கள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக மின்வாரியம் கணக்கில் எடுத்து, ஒரே மின் கட்டணமாக எடுத்துக் கொள்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் 100 யூனிட் மின்சார கட்டணம் இலவச சலுகை ரத்து செய்யப்படும்.
எனவே வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற புதிய நடைமுறைகளை மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

