/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்டர் மீடியனில் கொடி கட்ட ஆளுங்கட்சிக்கு மட்டும் 'ஓகே'
/
சென்டர் மீடியனில் கொடி கட்ட ஆளுங்கட்சிக்கு மட்டும் 'ஓகே'
சென்டர் மீடியனில் கொடி கட்ட ஆளுங்கட்சிக்கு மட்டும் 'ஓகே'
சென்டர் மீடியனில் கொடி கட்ட ஆளுங்கட்சிக்கு மட்டும் 'ஓகே'
ADDED : மார் 11, 2025 06:17 AM
திண்டிவனம் - மரக்காணம் சாலையை முதலமைச்சர் மேம்பாட்டு நிதி மூலம் அகலப்படுத்தும் பணி முடியும் நிலையில் உள்ளது. சாலையின் குறுக்கே சென்டர் மீடியன் கட்டை அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் முருக்கேரி, நல்லாளம், ஆலங்குப்பம், எண்டியூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஒளி, ஒலி அமைக்கும் 25க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து அவர்களிடம் சென்டர் மீடியன் கட்டை மீதும் தடுப்பு வேலி மீதும் கட்சி கொடி கம்பங்கள், பேனர்கள் கட்ட அனுமதி கிடையாது. கட்சியினர் கூட்டம் போட்டால் சாலையை தடுத்து ஸ்டேஜ் அமைக்க கூடாது அப்படி மீறி அமைத்தால் உங்கள் மீது சட்டப்படி வழக்கு பதிந்து, பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு முருக்கேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அப்பொழுது அ.தி.மு.க., வினர் சாலையின் ஒரு புறத்தை அடைத்து ஸ்டேஜ் அமைத்து, சென்டர் மீடியனில் கொடி கம்பம் நட்டனர்.
உடனே பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையை மறித்து ஸ்டேஜ் அமைக்க கூடாது மேலும் சென்டர் மீடியனில் உள்ள கொடி கம்பங்களை அகற்றுங்கள் என கூறியதன் பேரில் அகற்றப்பட்டது.
நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முருக்கேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அப்பொழுது சாலையின் ஒரு புறத்தை அடைத்து ஸ்டேஜ் அமைத்தனர். மேலும் சென்டர் மீடியன், தடுப்பு வேலிகள் மீது தி.மு.க., வினர் கொடி கம்பங்களை நட்டனர்.
ஆளுங்கட்சிக்கு மட்டும் கொடி கட்ட அனுமதி கொடுத்துவிட்டு, அ.தி.மு.க.,விற்கு மட்டும்
அனுமதி மறுக்கப்பட்டது அந்தப்பகுதியில் போலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.