/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஞ்சமாதேவி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை
/
பஞ்சமாதேவி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை
பஞ்சமாதேவி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை
பஞ்சமாதேவி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை
ADDED : ஜூன் 28, 2024 11:17 PM

விழுப்புரம் : பஞ்சமாதேவியிலிருந்து 11ம் ஆண்டு பாதயாத்திரை குழுவினர் திருப்பதி புறப்பட்டனர்.
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோவில் பாத யாத்திரை குழுவினர், 11ம் ஆண்டாக திருப்பதிக்கு பாதை யாத்திரை சென்றனர். நேற்று காலை 7:00 மணிக்கு பஞ்சமாதேவி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, திருமலை திருப்பதிக்கு, 100க்கும் மேற்பட்டோர், கண்ணன் ராமானுஜதாசர் தலைமையில், பஜனைகள் பாடி யாத்திரையாக புறப்பட்டனர்.
இவர்கள், விழுப்புரம், தீவனூர் வழியாக 30ம் தேதி தென்னாங்கூர் கோவில் அடைகின்றனர். ஜூலை 1ம் தேதி காஞ்சிபுரம் கோவில், 2ம்தேதி திருத்தணி திரவுபதியம்மன் கோவில், 3ம் தேதி நகரி தேவஸ்தான மண்டபம், 4ம்தேதி திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் சன்னதியில் தரிசனம், தொடர்ந்து திருமலை படிகள் ஏறி ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.