ADDED : ஜூலை 23, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: பெயிண்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்தவர் முருகன், 57; பெயிண்டர். இவரது மனைவி அஞ்சலி. இவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் மன உளைச்சலில் மது குடித்து வந்தார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி தனது வீட்டில் முருகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
