ADDED : ஜூலை 23, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து, திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
டில்லியில் நீட் தேர்வில் நடந்த குளறுபடியை கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தமிழ்நாடு முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரி எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைச் செயலாளர் ராவணன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கார்த்தி, கலையரசன், தமிழமுதன், தினேஷ்குமார் உட்பட பலர் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பேசினர்.
