/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 11, 2024 11:49 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் துணை ராணுவ படையினர் தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிக்கு 5 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் முகாமிட்டுள்ளனர். நேற்று மாலை அவர்கள் விழுப்புரத்தில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். தேர்தலின்போது, அசம்பாவிதம் ஏதுமின்றி, அமைதியாக தேர்தல் நடந்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் மைதானத்தில் இருந்து அணிவகுப்பு துவங்கியது.
விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் தலைமையில், பேண்டு இசைக்குழுவுடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

