/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
/
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 14, 2024 05:40 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் துணை ராணுவ படையினர் தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிக்கு 5 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் முகாமிட்டுள்ளனர்.
தேர்தலின்போது, அசம்பாவிதம் ஏதுமின்றி, அமைதியாக நடந்திட, நேற்று மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்தில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். விழுப்புரம் ரயில்வே பாலம், உழவர் சந்தை அருகே இருந்து, கிழக்கு பாண்டி ரோடில், அணிவகுப்பு தொடங்கியது.
விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் உள்ளூர் போலீசார் தலைமையில், பேண்டு இசைக்குழுவுடன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

